என் முகங்களைக்
களைந்து பயணிக்கிறேன்
முகங்களற்ற வெளியில்...
அங்கு இருவர்
பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.
கூர்ந்து கவனிக்க முயற்சித்தேன்
அவர்கள் பேசிக்கொள்ளும் மொழி
எனக்கு புரிபடுவதாயில்லை
முகங்களேதும் இல்லாததால்
அடையாளம் காணுதலும்
இயலாமற்போனது
இறுதியில் கபகபவெனச்சிரித்தான் ஒருவன்
சப்தமேதுமின்றி முடங்கிப்போனான் ஒருவன்
சிரித்தவனும்
முடங்கிப்போனவனும்
யாரென அறிய இயலவில்லை.
களைந்த முகம்
மீளத்திரும்பியபோது
சிரித்ததும் முடங்கியதும்
யாரெனப்புரிந்தது.
கீற்றில் தேட...
முகங்களற்ற வெளியில்...
- விவரங்கள்
- சின்னப்பயல்
- பிரிவு: கவிதைகள்