பிள்ளைப் பருவம்
முடிக்கும் தருணத்தில்
பிறந்துவிடுகிறது
அவர்களுக்கான
முகமூடி...
இதற்குள்
அவரவர்கள்
அவரவர்களுக்கு
நல்லவர்களாகவே
தெரிவார்கள்...
அதற்குள் உள்ளே
எப்போதுமே
மறைந்திருக்கும்
ஒரு சொல்லப்படாத
மெய்....
அதற்குள் வெளியே
எப்போதுமே
அலைந்திருக்கும்
ஒரு சொல்லப்பட்ட
பொய்....
காலச் சக்கரம்
தயாரித்துக் கொண்டிருக்கிறது
புது முகமூடியை
மற்றொரு பிள்ளை
பருவம் முடிக்கும்
குழந்தைக்காக...