கீற்றில் தேட...

 

அடுத்தடுத்த
அதிர்வுகளைத் தாங்காமல்
ஸ்தம்பித்து நின்றது
என் இதயம்
ராட்சச சிலந்தி வலையில்
இரையாக
நான் மாட்டிக்கொண்டேன்
ஆயிரக்கணக்கான பூச்சிகள்
வசிக்கும்
அறையொன்றில் என்னை
வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு
கதவைத் தாழிட்டார்கள்
உடலுக்குள் இயங்கும்
கால இயந்திரம்
தறிகெட்டுப் போனதால்
உறக்கம்
உடலைத் தழுவாமலேயே
இரவுகள் கழிந்தன
அசாதாரணமான சூழ்நிலையை
சமாளிக்கும் திறனற்று
கையைப் பிசைந்து கொண்டு
வேடிக்கை பார்க்கிறேன்
மரண சர்ப்பம்
என்னை முறுக்கிப் பிழிகிறது
எலும்புகள் உடையும் ஓசை
செவிகளில் கேட்கிறது
தன்னிலை தவறியபோது
சூன்யம் வாவென்றழைத்தது.