மொத்த படைப்புகளின் உச்சமாய்
அவர்கள் படைக்கப்பட்டிருந்தார்கள்
பொதுப்புலன்களின்
பரஸ்பர வசீகரம்
இருவருக்குமிடையே இருந்தும்
ஒரு சிறிய அனுமதிக்கு
காத்திருந்தவர்கள் போல் இருந்தார்கள்
காமம் துளியும் பரிச்சியப்படுத்தப்படாத
ஒரு பௌர்ணமி இரவில்
ஏடன் தோட்டத்து முழு அதிபதி
நான்தான் என்ற கர்வத்தில்
இருவருக்குமான இடைவெளி
நீண்டு கொண்டே போக
காமத்தை முதன் முதலில்
அறிமுகப்படுத்துகிறது
சாத்தானின் கருணைப்பார்வை
கரைந்து போனது கர்வமும்
தான் என்ற அகந்தையும்
காமத்தின் முன்னே
சாத்தானை
தலைமுறைக்குற்றவாளியாக்கியபடி
- பிரேம பிரபா (