கீற்றில் தேட...


கனிந்த பழங்களையொத்த‌
வண்ணங்களை அரிதாரித்த காய்கள்
கிளைகளிலிருந்து பறிக்கப்படுகின்றன
முதிர்வதற்கு முன்பே...

பறிக்கப்பட்ட காய்கள்
கனிவிக்கப்பட்டு பழமாக்கப்படுகின்றன‌
செயற்கையாக...

கனிந்தபிறகே தேடத்துவங்குகின்றன கனிகள்,
க‌னிவிக்க‌ப்ப‌டுகையில் தொலைந்துபோன
சுவைகளையும் வண்ணங்களையும்...

அரிதாரிக்க‌வேண்டிய‌
வ‌ண்ண‌ங்க‌ளையும் சுவைக‌ளையும்
காய்க‌ள் ப‌ருவ‌த்தே அறிய‌ட்டும்...

 - ராம்ப்ர‌சாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)