கீற்றில் தேட...

 

தனக்காக படைத்த
சிறிய பயங்கரனை
தானே வீழ்த்தினான்
பெரிய பயங்கரன்.

ஒசாமா கொல்லப்பட்டதால்
உறுதியானது அமெரிக்காவின்
அடுத்த தேர்தலில்
ஒபாமாவின் வெற்றி.

நிம்மதியா இல்லையா...
உறுதியை இழந்த
தவிப்பே சூழுது
எளியோரைச் சுற்றி.

படைப்பின் வீழ்ச்சியை
கொண்டாடும் உலகீர்
படைத்தவன் வீழ்ச்சியை
என்றைக்கு உறுதி செய்வீர்?