கீற்றில் தேட...

 

தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில்
தொண்டுகிழவர் கைத்தடியும் தடித்த கண்ணாடியுமாய்
தாண்டி போகிற யாவரிடமும் யாசிக்க...

     நொடி பொழுதும் திரும்பி பார்க்காத
     சடசடவென்று பரபரக்கும் மனிதர்களுக்கிடையே -
     கையில் கட்டட பொருட்களோடு ஓடிய
     தொழிலாளி குடும்பம் ஒன்று நின்று
     துளாவி காசு கொடுத்து  ஓடியது ..

உலகமயமாக்கலின் பொருளாதார சிக்கலில்
பிதுக்கப்பட்ட, விளிம்பிலிருந்த பற்பசையாக
ரோட்டோரத்தில் கையேந்தி இன்று இக்கிழவர்
நாளை அவர்களாகக் கூடுமென்ற கரிசனமோ?

     விளிம்பை தாண்டி தள்ளப்பட தள்ளப்பட
     உள்ளிருந்த அனைத்துக்கும் தன்முறை வரும் - என
     உணராத கூட்டம் கைபேசியுடன் வேகவேகமாக...

- கே.சித்ரா (k_இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)