நெருப்பும் நீரும்
தாய் சேய்...
பூமிக்கருவில் கொதிக்கும்
வெப்பம் தாய்...
வெப்பம் ஈன்ற சேய்
தண்ணீர்...
சமயங்களில்
சேய் தாயாகிடுகையில்
தாயாகிவிடுகிறது சேய்...
ஆம்..
நுண்ணுயிர்கள் தண்ணீர்
ஈன்ற சேய்...
பெண்ணின் கருவறையில்
நீர்க்குடம் ஈன்றுவிடுகிறது
வெப்பம்...
- ராம்ப்ரசாத் சென்னை (
கீற்றில் தேட...
தண்ணீர் காட்டில் - 3
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்