பூட்டுக்கள் மாறியது
சாவிகள் மாறியது
சிறைச்சாலை மாறவில்லை..!
ஆட்சி மாறியது
காட்சி மாறியது
அவலம் மாறவில்லை..!
வேட்டி மாறி
சேலையானது
வேதனை மாறவில்லை..!
ஹரிஜன் மாறி
'தலித்' ஆனது..!
தீண்டாமை மாறவில்லை..!
உடைக்க முடியவில்லை
உள்ளத்தில் நீண்டிருக்கும்
உத்தபுரச் சுவர்கள்..!
ஊரே எரிந்த போதும்
பிடில் வாசித்த
நீரோவிற்கு நன்றி..!
மேலும் பற்ற வைக்காத
பெருந்தன்மைக்காக..!
- அமீர் அப்பாஸ் (