நடைவழியில் நகரும் நிழல்களின் நுனி
இழுத்துக் கொண்டு போகிறது
வெயிலின் மஞ்சள் கரையை
படியை நோக்கி
பூச்சாடியிலிருந்து உதிர்ந்த
காகிதப் பூவின் இதழ்
வெளுத்துவிட்ட நிறத்தின்
கிழிசலோடு
சொற்ப காற்றுக்கு படபடக்கிறது
சுவரின் ஓரமாக ஒண்டியபடி..
அமைதி பூசிய மேற்கூரையின்
மௌன மூலையில்
நிதானமாக வலை பின்னிக் கொண்டிருக்கிறது
காலச் சிலந்தி..
*****
- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )