பிரியங்கள் புனைந்து
சுமந்த கருக்கள்-அவைகளின்
கனவு விருட்சங்களில்
பிரியங்களின் வர்ணத்தை
தூரிகையில் துளைத்தெடுத்து
தங்களின் அடையாளத்தை
தேடிக்கொள்கின்றன.
வர்ணங்களின் பேதமை
அறியாத பிரியங்கள்
இன்னபிற கருக்களையும்
அவ்வாறே சுமப்பதில்
தங்களுக்கான வர்ணத்தின்
செறிவு பற்றி வினவ
ஆரம்பிக்கின்றன கருக்கள்.
வினவுகளின் ஆழம்
புரியாத பிரியங்களின்
வெற்றுப் பதில்களில்
தங்களுக்கான தடித்தத்
தோல்களை அறுத்தெறிந்து
இரத்தவழிதலில்
கருக்கள் தேடி அலைகின்றன
புது வர்ணங்களை.
- சோமா (
கீற்றில் தேட...
கருக்களின் வர்ணம் தேடுதல்
- விவரங்கள்
- சோமா
- பிரிவு: கவிதைகள்