எண்ணங்களை எழுத்துக்களில்
கோர்க்க எத்தனிக்கும்
ஒவ்வொரு ஆத்மப்
பயணத்தின் இறுதியிலும்
தன் மௌனங்களைக் கொன்ற
அடைகுறிகளோடு
விழித்துக் கொள்கிறான்
என் ஞான அரக்கன்.
நீளும் கோரப் பசியில்
நாலாபுறமும்
வார்த்தைகளைத் தேடி
அலையும் அரக்கனின்
கண்களுக்கு எதிர்படும்
வார்த்தைகள் அத்தனையும்
இரையாகி கவியுலக
மோட்சம் பெறுகின்றன.
வார்த்தைகளை விழுங்கிச்
செரித்த களிப்பின் மிகுதியில்
கண்ணயரும் அரக்கனை
மௌனக்கனவுகள் தின்று
தீர்க்கின்றன - மிச்சப்பட்டவனாய்
விழித்துக்கொண்டதில்
முற்றுகையிட்டு ஒப்பாரி
வைக்கின்றன வார்த்தைகள்.
- சோமா (
கீற்றில் தேட...
கவிஅரக்கன்
- விவரங்கள்
- சோமா
- பிரிவு: கவிதைகள்