எழுதியே தீரவேண்டும்
என்பதில் தேடுகிறேன்
ஒரு போதி மரத்தடியை
என் அமர்தல் வேண்டி.
கண்ணில் வழியும் சோர்வு
மனதுள் பூக்கும் வெறுமை
புரிதலில்லா அவள் சிரிப்பு
புலப்படாத வார்த்தை
நிலை கொள்ளாத
எண்ண அலைகள்
என எழுதாமல் இருக்க
ஆயிரம் காரணம்
வாய்த்திருக்கும் போதிலும்
எழுதியே தீர வேண்டும்.
என்ன எழுத? எதுவாகினும்
எதைப் பற்றி? புரியவில்லை
அர்த்தங்கள்? அவசியமோ!!
மொழி நடை-இருவர் பாஷையில்
எதையாவது எழுதியே தீருவது
புரிதலில்லா மொழியில்
அவள் உறவைப் போலவே.
எழுதிக் கொண்டிருக்கிறேன்
பரீட்சைக்கு முதல் நாள்
எழுதிப் பழகும் ஒரு
சிறுகுழந்தை போல.
- சோமா (