பின்னிரவானது
பிள்ளைக்குக் காய்ச்சலும்
கொதித்தது
கணவனை அழைத்தாள்
பிள்ளையும் பேசியது
அரை மணி என்றான்
ஒரு மணி என்றான்
நேரம் ஆனது
பிள்ளையும் நொந்தது.
அலமாரியில் என்றோ
சேமித்த மாத்திரை
அம்மாவின் கைகளில்
அகப்பட்டுப் போக
காய்ச்சலை மறந்து
உறங்கியது பிள்ளை
காட்டுப் பூனையாய்
நள்ளிரவில் வந்தான்
தொட்டுப் பார்த்துத்
தொலைவாய்ப் படுத்தான்
காலையும் விடிந்தது
வீட்டு வாசலில்
காரும் வந்தது
பாதி கழுவிய முகம்
கையின் ஒருபுறம்
மாட்டிய சட்டை
அரசியல் மந்தையில்
இன்னொரு ஆடாய்
ஒரே பாய்ச்சலில்
புறப்பட்டு ஓடினான்
'அண்ணனின் அழைப்பிற்கு'