வழி தெரிந்து பயணிப்பவனை விட
வழி தெரியாமல் பயணிப்பவனின்
வலியில் இருந்தே புது வழிகள் பிறக்கின்றன
இப்பயணத்தில் பல வலிகளை இவன் அடையலாம்
இதுவே இவன் அடையாளமாகவும் மாறலாம்
சில நேரம் வழி தோன்றாமலும் போகலாம் .
முடிவில் ஏதோ ஒன்றை செய்துவிட்டு
போகட்டும் இவன் பயணம்
பாதைகள் இருந்தும் பயணிக்க மறுக்கும்
உன்னைப் போல் அல்லாமல்...
கீற்றில் தேட...
உன்னைப்போல் அல்லாமல்...
- விவரங்கள்
- உமா கார்க்கி
- பிரிவு: கவிதைகள்