காலையின் நிச்சலனக் குளத்தில்
கமல இதழ்களென
தழதழத்திருக்கிறது மனம்
நீளும் கமலத் தண்டினை
நிலமதிரப் பிடுங்குவதுபோல்
கைபேசி அலறல்
நொடி கலங்கி
சமையலறை அடுப்பந் தணலின்
நாவிற்கிரையாகிறது
சலனத்திற்குப் பிய்ந்த
மன இதழ்.
- மேழி வான்மதி