கீற்றில் தேட...

வற்றிவிடும்
குட்டையிலிருந்து
எடுத்த வசவுச் சொற்களால்
நிரப்பிவிடத் துடிக்கிறாய்.
கடலென அறியாமல்.
வேறென்ன
அறியாமை அகற்ற
அலுப்புகள் கொள்ளாமல்
காத்திருக்கத்தான்
வேண்டியதாகிறது
கருணையெனவானதால்.

- ரவி அல்லது