கீற்றில் தேட...

மாடு முட்டி விடுமோ
பயந்தோடி வந்து
என்னருகில் நிற்கிறாய்
இப்போது
மான் முட்டி விடுமோ
படபடப்போடு நான்

*
வாசல் தொடுகிறது
வீடு நுழைகிறது
பிறகு
அறைகளில் அலைகையில்
காணாமல் போகிறது
வீதி குரலுக்கு
வெற்றிடத் தோகை

*
குத்துக்காலிட்டு
மடியில் தலை சரித்த
உன்னை
லியானர்டோ பார்த்திருந்தால்
மோனலிசா இல்லை
உன் மோகனப் புன்னகை தான்

- கவிஜி