ஏதோ ஒன்றாக
உடனே உருமாறிட ஆசை
விரித்த சிறகின் நிழலை
பூமியில் கர்வத்துடன் படர்த்தி
அழகு பார்க்கும்
ஒரு பறவையாய்
இரைக்கு உறுமியபடி
தன் குட்டியையும்
வாஞ்சையுடன்
நக்கிக்கொடுக்கும்
ஒரு சிங்கமாய்
உருமாறி, கலையும்
மேகமாய்...
இரவின் தனிமைக்கு
துணை சேர்க்கும்
கிராமத்து ஆற்றின்
சிறு சலசலப்பாய்
ஆகக்கூடி
நானாக மட்டும் இல்லாமல்
முற்றிலும் பிறிதொன்றாய்
குறைந்த பட்சம்
உன்னைபோலவாவது
உடன்பாடில்லா மௌனத்தை
உடைத்தெரியாமல்
தொடர் மௌனத்தை
கேடயமாக்கும்
உன் யுக்தியை
கண்டறியும் பொருட்டாவது
- பிரேம பிரபா (