வெட்கம் கசங்கிய
பின்மாலையில் பத்திரப்படுத்தி வைக்கலாம்
விடுபட்ட வெட்கங்களை..
அல்லது..
வெட்கம் கசிய
முன்னிரவில் முத்தங்கள்
கோர்த்திசையலாம்..
இரண்டுமே ஒன்றாயின்..
அறிந்தவர்கள் அறிந்திருக்கலாம்,
நீரை யாமாற்றும் தக்கைபோல்
காதலை யாமாற்றும் கருவியுமென!
பின் நவீன யுகத்தில்
இவ்வியாபார அலைப்பேசியினை..
- ஆறுமுகம் முருகேசன் (