கீற்றில் தேட...

பனித் துளி வந்தமர்ந்த மலர்களில்
ஒன்றாகவேணும்
முகில் கூட்டம் குடி கொள்ளும்
மலையாகவேணும்
வானவில் கட்டிக்கொண்ட
நிறமாகவேணும்
வலி கொண்ட பாதைக்கு
வழியாகவேணும்
இதழ் சுவை இதமளித்த
அதரமாகவேணும்
தென்றல் காற்றில் வீசப்பட்ட
சருகாகவேணும்
நீ
நினைத்திருந்த
உன் நிழல் ஓவியங்களின்
தூரிகையாய்
நானாகாவேணும்....