கீற்றில் தேட...

நிலைக்கண்ணாடியில்
சாத்தானை தரிசித்தபடி
புணரும் பொழுதின்
நீட்சியாய்
ஆலயம்யாவும்
கடவுளை தரிசித்தபொழுது
பயபக்தியுடன்
சூம்பிப்போன சாத்தான்
தெரிவதில்லை
குட்டப்பனிடம் சொல்லி
பீடத்திற்கு பின்
நிலைக்கண்ணாடி ஒன்றை
வைக்க வேண்டும்.