
ஆற்றுக்குளியலுடன் ஆசையாய்
அனுபவித்தாயிற்று பார்த்துப்பார்த்து
தொழில்நகரத்தில் கிடைக்காதவற்றை
ஊர்வாசத்தின் மிச்சமாய்
பயணப்பட்டன சில பூச்செடிகள்
இரயிலில் என்னுடன்
எல்லாவற்றையும் பிரிக்கையில்
இலவச இணைப்பாக வெளிப்பட்டது
செடிகளுக்கு நடுவே ஊர்ந்தபடி
இரயில் பூச்சி ஒன்று
பார்த்தறியாத பக்கத்து வீட்டு
குழந்தைகளிடம் காட்ட வேண்டும்
உயிரோடிருக்க வேண்டும்
அந்த பூச்சி