நகர்கிறேன்
தெளிந்த நீரின் பிரவாகமாய்
தடயங்களை விட்டுச்செல்வதில்லை
பாறைகளின் வன்மம்
நகர்த்தப்படுகிறேன்

உதிர்ந்து விட்ட சருகுகள்
சொல்ல மறந்த சலசலப்பில்
வரையறுக்கப்படாதது
என் வெளி
வெளிச்சமும் இருளும்
வித்தியாசப் படுவதில்லை
பெருமழையின் சுவடுகள்
எதிர்பாராத வெள்ளமாயும்
வானவில்லின் பிரதிபலிப்பிலும்
உயிர்ப்புடன் பயணிக்கிறேன்
தீராநதியாய் நான்
- லஷ்மி சாஹம்பரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )