எனக்கான தொடக்கத்தை
எங்கேயோ ஓர் விந்தணு
விரயம் செய்தது ..
எனக்கான தாலாட்டை

எங்கேயோ ஓர் குயில்
கூவிசெல்கிறது...
எனக்கான சுவாசத்தை
எங்கேயோ ஓர் மரம்
சுத்திகரிக்கிறது...
எனக்கான தாகத்தை
எங்கேயோ ஓர் மழைத்துளி
தத்தெடுக்கிறது...
எனக்கான பயணத்திற்காக
எங்கேயோ தைக்கப்படுகின்றன
அனுபவசெருப்புகள்...
எனக்கான அறிவிற்காக
எங்கேயோ வளைக்கப்படுகிறது
ஓர் வினாக்குறியின் விளிம்பு...
எனக்கான காமத்திற்காக
எங்கேயோ உடைகிறது
ஓர் உதிரக்குடம்...
எனக்கான முடிவிற்காக
எங்கேயோ ஈடு செய்கிறது
இன்னொரு தொடக்கம்....
இதில்
எங்கே நான்.....?
- விஜயகுமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.