பூஜையறை முழுக்க
குப்பையென
மூட்டைகள்
எப்போதும்

பார்த்திராத
எண்ணெய் பிசுக்குடன்
சமையலறை
சுவர் முழுக்க
அழுக்குத்
தழும்புகளுடன்
குளியலறை
மடித்து வைக்காமலே
மறுபடி மறுபடி
பயன்படுத்தப்படும்
படுக்கைகள்
இன்னொருவன்
மனைவியாகி
கஷ்டப்படும்
காதலியைப்போல்
காண சகிக்காமல்
நான்
முன்பு குடியிருந்த வீடு.
- க.ஆனந்த் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.