கீற்றில் தேட...

துப்பாக்கி முனைகளில்
அடகு வைக்கப்பட்ட
Refugees
எங்கள் வாழ்க்கையை
நினைந்து
ஒரு போதும் வருந்தவில்லை

தந்தை கொல்லப்படும்போதோ
நண்பன் கடத்தப்படும்போதோ
இவ்வளவு வருத்தம்
எனக்குள் எழுந்ததில்லை

என் வீட்டில்
பதிந்திருந்த
சநதேகக் கண்காணிப்போ
பசியின்
கோரப்பிடிக்குள்
சிக்கித் தவித்த
நரக நிமிடங்களோ

என்னை இத்தனை தூரம்
அழவைத்ததில்லை

பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய்
மண்வாசனையை
தேடும்போதுதான்
உயிர் கருகுகிறது