கீற்றில் தேட...


Love
எப்பொழுதும் மெய்யுரைக்குமுன்
கருவிழிகளில் தொலைந்தேனா
கருந்திரவ நீர்வீழ்ச்சியொத்தவுன்
நீள்கூந்தலில் மூழ்கிப் போனேனா
எப்பொழுதும் பரவசப்படுத்தும்
இதழ் நகையில் திருட்டுப் போனேனா
எல்லாம் நல்லதெனும்
நற்குணத்தில் புதைந்தேனா
எதிலுன்னிலீர்க்கப்பட்டேன்

பூவென்றெண்ணி உன்னில் மொய்த்த
வண்ணத்துப்பூச்சிகளைத் தென்றல் தினமுமுன்
சுவாசங்களோடு அழைத்துவருகையில்
அவற்றின் மயிர்க்கால்களைத் தொட்டு
உன் வாசனை மகரந்தங்களை முகர்ந்தபடி
நம் காதலின் வண்ணங்கள் சிலவற்றை
அவற்றுக்குக் கடனாகக் கொடுத்திருக்கிறேன்
நாளை வரும்போது மறவாமல் கேட்டு வாங்கிக் கொண்டு
ரோசாப் பூக்களையொத்த உன்
இதழ்ப் பூ, நகப் பூ வண்ணத்தினை மட்டும்
எனக்குத் தூதனுப்பு