இந்நாட்களில்
எப்பொழுதும் எதையாவது
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்
வாகனங்களற்று நீளும்
சாலையின் தனிமையுடன்
கசப்பான நினைவுகள்
நிறைந்ததாக இருக்கின்றது இவ்வாழ்க்கை
அவைகளை
ஒவ்வொறுமுறை கிளரும்போதும்
மீண்டுமொறுமுறை என்னில்
வலிகளை ஏற்படுத்த தவறுவதில்லை
காகிதமாக்கி கசக்கி எறியவோ
முற்றிலும் அழித்துவிடவோ முயலும்
என் முயற்சிகள் அனைத்தும்
தோல்வியையே தழுவுகின்றன
ஒருபோதும்
உன் வெளிச்சங்களால்
நெருங்க முடியாத என் இரவுகளோடு
இன்றும் கூட நிகழலாம்
ஏதேனுமொரு கசப்பான நிகழ்வு
என்னாலும் தடுத்துநிறுத்த இயலாதபடி
- குட்டி செல்வன் (
கீற்றில் தேட...
ஏதுமற்ற வானம்
- விவரங்கள்
- குட்டி செல்வன்
- பிரிவு: கவிதைகள்