கீற்றில் தேட...

 

தாய் மொழி ஒன்றாம்
தங்கும் ஊரும் ஒன்றாம்
தம்ளர் மட்டுமே ரெட்டை

ஊன்றுகோலை ஊன்றும்போதெல்லாம்
Brave menநினைவுக்கு வருகின்றது,
விலகியே இருக்கும்
மகனின் தோள்கள்...

ஒரு மணி நேர கோஷம்
ஒதுங்கியது ஐம்பது ரூபாய்
ஒதுக்கப்பட்டது அடிப்படை உரிமை

கறுப்பரை முன்னிறுத்தி
களங்கம் போக்க முயலும்
கறை போகா நாடு

பூத்துக் குலுங்குகின்றன
மலர்கள்
மயானத்தில்

ஆசையுடன் கேட்டாள் புத்தாடை, பட்டாசு
அணுகுண்டாய் வெடித்தார் அப்பா
ஆறு மாதமாய் மூடப்பட்டிருக்கும் ஆலை