பசுமை போர்த்திய
பள்ளத்தாக்குப் பெருவெளியில்
ஆசுவாசமாய் அமர்ந்து கதைக்கும்
இரு மேக நிழல்களினூடே
பேசுபொருளாயிருக்கிறது
நம் காதல்
இருள் கவிழ்ந்த பின்னிரவில்
நிசப்தத்தைக் கிழித்தபடி
திரைச்சீலை விலக்கியவாறு அறைக்குள் புகும்
சுவர்க்கோழிகளின் சீண்டல் கொக்கரிப்பில்
மீண்டுமாய் பொங்கி வழியத் துவங்குகிறது
விழித்துக்கொண்ட நம் காதல்
- கோகுலன் (
கீற்றில் தேட...
நானும் காதலும் - 3
- விவரங்கள்
- கோகுலன்
- பிரிவு: கவிதைகள்