அடர்ந்து பொழிகின்றது
சில தினங்களாய்
பருவம் தப்பிய இம்மழை
வலுவான காற்றுடன்
வரும் அதன் நோக்கம் அறியயியலாதது
வரவேற்க விரும்பாதது
மழையாலும் காற்றாலும்
பிடிப்பினை ஏதுமற்ற என் கிளைகள்
ஒடிந்துவிழாமல் இருக்க
தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றேன்
இலைகளற்று
நிர்வாணமாக்கபட்ட பிறகு
கவலை கொள்ள ஒன்றுமில்லைதான் எனினும்
மனதை கணக்கச்செய்கின்றன
தொடர் போராட்டத்திற்கிடையே
கரைந்து வழியும் மழையுடனான
எனது பழைய நெருக்கங்கள்
ஏனிந்த மாற்றமென வியப்பளிக்கையில்
மேலும் அதி தீவிரமாகி
எனை முற்றும் சாய்க்க முயல்கின்றது
அதன் கோர முகங்காட்டி
என் சுயங்கள் வழியே
எனது கிளைகளை விரியச் செய்கின்றேன் இவ்வெளியெங்கும்
வேர்களை பரவச் செய்கின்றேன் மிக ஆழமாக
இப்பொழுது
சமாளிக்கக் கற்றுகொண்டிருக்கின்றேன்
இம்மழையை
அரவணைப்பதாயினும்
அடித்து வீழ்த்துவதாயினும்
- குட்டி செல்வன் (
கீற்றில் தேட...
வனத்தின் தனிமரம்
- விவரங்கள்
- குட்டி செல்வன்
- பிரிவு: கவிதைகள்