மழலைகளின் புன்னகை கண்டு
பாலையெங்கும் பொம்மை சொட்டும்
அதீத அற்புதமுண்டு !
மழலைகளின் அழுகை

நிர்மாணிப்பதும் உண்டு !
ஒரு வீட்டில் கண்டது!
அண்ணன் ஒழிக்கிறான்
தங்கை அழுகிறாள்
மூக்குச்சப்பிய பொம்மை ரசிக்கிறது !!
முத்தமிடும் குழந்தை
முத்தம் கேட்கும் குழந்தை
பரிசு பொம்மை
எவை அழகு !
பல்முளைக்கா மழலை
பாடும் பொம்மை
இரண்டும் அழகு !
குறிப்பாக இதைச்சொல்லியாக வேண்டும்
குழந்தைகளும் பொம்மைகளும் ஒன்றென
நிச்சயிக்கும் வண்ணம்
உடைமாற்றி ரசிக்கின்றனர் பலர் !
வயிறு தள்ளாது
குழந்தை பெற்கும்
பொம்மைக்கவிதை அழகோ அழகென
யாரோ சொல்வது
ஷ் ஷ் ஷ்.. ரகசியம்.. !!
- ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )