
ஓடத்துவங்கினர்
வாகனங்களின் வேகம்
சாலைகளில்
சற்றுக் கூடியிருந்தது
குடும்பத் தலைவிகள்
மாடிக்கு ஓடினர்
இவ்வளவு
நேரமாய்ப் போகாதவன்
இப்பொழுது பார்த்தா
செல்லவேண்டும் கடைவீதிக்கு
வாஞ்சையுடன்
வருத்தப்பட்டாள் அம்மா
குளிர்பானம் விற்பவன்
சலித்துக்கொண்டான்
வராந்தாவில் விளையாடிய
குழந்தைகள்
வீட்டினுள் அழைக்கப்பட்டு
கதவு சாத்தப்பட்டது.
"மதியாதார் வாசலை மிதிக்கவேண்டாம்"
பள்ளிக்கூட ஓடுகளில்
தவழ்ந்த துளிகளின்
காதுகளுக்குக் கேட்டிருக்கும்போலும்
திசைமாறி
கடல்வீட்டினுள்
ஆனந்தமாய்ப் பெய்துகொண்டிருந்தது
மானமுள்ள மழை!
- உழவன்