சொல்லிச் சொல்லியே
விலாஎலும்புகளை
நசுக்கிக்கொண்டலைகிறது
காலம்
தசைகிழித்து
விலா எலும்புகள்
வெளிப்பட தொடங்குகையில்
சட்டம்கூறி நசுக்கவும்
தயங்கியதேயில்லையது
முரண்பாடான வரலாற்றில்
எப்போதும் யாரும்
இதுநாள்வரை
விலா எழும்பிலிருந்து
தோன்றியதாக
தெரியவேயில்லை
- கவிமதி, துபாய்