
செல்பவர்களுக்குத்தான்
அந்த சுகம் தெரியும்.
சொற்களுக்கு
அப்பாற்பட்ட
சுகம்.
ஒவ்வொரு பயணத்திலும்
காண முடிகிறது.
ஊர் உருமாறி வருவதை
கட்டைவண்டி
செம்மண் பாதை
தார் ரோடாகி
மினி பஸ் ஓடுகிறது.
தீவிட்டி வெளிச்சத்தில்
வீதியுலா வந்த
பெருமாள் கோயில்
உற்சவ மூர்த்தி
ஜெனரேட்டர்
ஒளிவெள்ளத்தில்
தெரு பார்க்கிறார்.
டூரிங் டாக்கீஸ் மணலில்
எச்சில் துப்பிக் கொண்டே
எம்.ஜி.ஆர். படம்
பார்த்தவர்கள்
கேபிள் இணைப்பில்
பார்க்கிறார்கள்
எம். டி.வியும்
எஃப் டி.வியும்.
விறகுப் புகையை
விரட்டி விட்டது
கேஸ் அடுப்பு.
உரல், உலக்கை
அம்மி, குழவியெல்லாம்
கொல்லைப்புற
கொட்டகையில்.
கணினி
செல்போன்
குவாலிஸ் கார்கள்
தாராள புழக்கத்தில்.
“ஊரு ஊரா இல்லப்பா...
பட்டணம் மாதிரி
ஆயிடுச்சி”
என்கின்றன பெருசுகள்.
ஊருக்குள் நுழையும்
ஒவ்வொரு முறையும்
‘எப்படி இருக்கிறே?’ என
அன்பாய் விசாரிக்கும்
அக்கம் பக்கத்தவர்கள்
மிச்சமிருக்கும்வரை
பட்டணமாக முடியாது
ஊர்ப்புறங்கள்
- கோவி. லெனின்