
யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது...
அடர்ந்த தொந்திரவுகளுக்கு மத்தியில்
அங்குமிங்கும் அலைந்து
தேய்ந்து போன வார்த்தைகள்...
எதையோ சாதித்து விட்டதாய்
அமைதியடையும் மனது...
இவைகளெல்லாம் இரண்டாவது வரியின்
முக்கியத்துவ சான்றுகள்...
குழந்தையின் மழலை
பனியின் கோபம் இப்படி....
எதையாவது கொண்டு
முடித்துவிடவும் முடிகிறது...
எதாவது ஓர் தலைப்பிட்டு
வாசித்து முடிக்கையில்
மௌனமாய் சிரிக்குமிந்த முற்றுபுள்ளி.
- ரிஷி சேது (rishi_