மழையில்லாத இந்த மண்ணில்..!
மண்ணை மிதித்து
பல்லாயிர மண்டலம் ஆயிற்று.!
செருப்பில்லாமல்
கால்கள் செல்வதில்லை
வெளியெங்கும்.!
என் சென்னையை
சூடாக்கிக்கொன்டே போவதேன்
என் வெயிலே.!
சுவாசம்
அனல்காற்றானது.
உடலை பாத்திரமாக்கி
உறுப்புகளை
வேக வைக்கிறது
உனது உஷ்னம்.
அறிவாளிதான் நீ.
தினமும் 100 மார்க்
எடுக்கிறாய்
'செல்சியஸ்' பாடத்தில்.
குளிர் பெட்டிக்குளிருந்த
பனிக்கட்டிகள்..!
வெளியே எடுத்ததும்
வெண்ணீராகி விடுகின்றன.
பகல் முழுதும்
உப்பு நீரில்
ஊறுகிறது தேகம் .
என்னவோ..மீன் போல்.
மனம் -
சூரியனை வெறுத்திருக்கும் வேளையில்...
வெயில் விருந்தாளியை
வரவேற்று
வேர்வை நீர் தருகிறது
உடல்!
விருந்தோம்பல்?
எல்லோரும்...
வெயிலுக்கு பயந்து
நிழலில் ஒதுங்கினார்கள்..
நிலத்தடி நீரோ
1000 - அடி கீழேபோய்
பதுங்கி கொண்டது!
குழாய் வழியாய்
எட்டிப்பார்க்கிறது
வெறும் குடங்கள்..!
பதுங்கிருக்கும் நீரை..!
உஷ்ணம் அதிகமாகி....
சோலார் அடுப்பு
சோலார் கார்
சோலார் மின்சாரம்
இன்னும் பல சோலர்கள்
உதிர்ந்துக்கொண்டிருக்கின்றன
எங்கள் அறிவிலிருந்து.
சூரியனே..!
உன்னை கடவுளாக்கினோம்.
சூரிய நமஸ்காரம் செய்தோம்.
எதிரியையும்
வணங்கும் வழக்கம்
இங்கு மட்டும்தான்..!
என்றாவது
இந்த மூடநம்பிக்கையை
நினைத்து
நீ அழுகிறாய்..!
அதை
கண்ணீர்
என்றறியாமல்
மழையென மகிழ்கிறோம்!
- தியாகுஆசாத் (