காணாமல் போயிருந்தன.
சாலைகள் கரைந்து
போய்விட்டிருந்தன.
நதிகளின் வெற்று
ஆற்று மணலும், வெறுமையும்
யாரும் அறியாவண்ணம்
பதுங்கிக் கொண்டது.
மனிதனும், அவன்
சிறுமையும், ஆணவமும்,
குரூரமும், இரக்கமும்,
இன்ன பிறவும்
உறங்கிக் கிடந்தன,
மிருகத்தின் களைப்புடன்.
நகரமும், அதன் பேரிரைச்சலும்
இரும்புத் தடியால்
அடக்கப்பட்டிருந்தது.
சமுத்திரத்தின் பிரமாண்டம் அதன்முன்
ஒளிந்து கொண்டது,
சில சலனங்களை மட்டும் ஏற்படுத்தியபடி.
அந்தத் தேவதை பூமியெங்கும் தன்
பரந்த கரங்களை விரித்து மூடியிருந்தாள்.
- ம.ஜோசப்