நடந்த தெரு வழியே போகிறார்கள் (றோம்)
மாடுகள் ஓடுற வெளிகள் கடந்து
காடுகள் தேடுற வேட்கை இழைய
இத் தெருக்கள்
அவர்க்காகவே (எமக்காகவே) காத்திருக்கின்றன
உ(எ)ன்னிடம் ஏதோ ஒரு துயரம் இருக்கிறது;
இனிய துயரம்!
சமயத்தில்
வன்மமாய் விச நாக்கு நீட்டிடும்
அரவத்தை மறைத்து விடுகிறாய்(கிறேன்)
உ(எ)ன் கண்களில் உதடுகளில் மூக்கில்
நிலைக்கையில்
முகத்தி லிருக்கிற உலர்வை மறந்து போகிறான்
- இவன்.
இன்றைய மங்கள தினம்
காடுகளை விலத்தி
விரியும் பிரதேச மூலைகள் எங்கேனும்
யாரோ புணர்வதற்காய்க் காத்திருக்கிறது;
அறிவாயா அன்பே?
நகரங்கள் தாண்டி நாம் வந்தது இதற்காக
- கற்பகம்.யசோதர