
ஒருமித்த மனதோடும்....
என்னுள்ளும் தேடிப்பார்க்கிறேன்
இன்னும் பணம்...
இன்னும் பணம்... என
எண்ணும் முதலாளிகளைப்போல!
பறந்துவரும்
பட்டாம்பூச்சியைப் போல
வண்ணங்களாலும்
வாசனைகளாலும்
ஈர்க்கப்படவே செய்கிறேன்.
காணும்போதெல்லாம்
காதலை எதிர்பார்க்கும்
விடலையைப் போல்
கண்ணில் படுபவற்றை
நிராகரிக்காமல்
நிறுத்துப்பார்க்கிறேன்.
பாகுபாடில்லாமல்
ஏற்றுக்கொள்கிறேன் நதிகளை
ஒரு கடலைப்போல்!
என்றாலும்...
எப்போதாவது தான்
அகப்படுகின்றன
எதிர்பார்க்கும் விதத்தில்
கவிதைகள்!
- இப்னு ஹம்துன்