அதில் நம் பிம்பம்
மாயக்கண்ணாடியில்
ஆம்!
சாதாரணப் பார்வைக்கு
அது கண்ணாடிதான்
ஆழ்ந்து நோக்கினால்
மங்கலாய் மின்னிடும்
மாயக்கண்ணாடி!
சராசரி வாழ்வினில்
நிலைத்துள்ள ஒருவனின் வாழ்வு
மாயக்கண்ணாடியில் இருள்கிறது.
கருமை விலக
கருத்து நிறைய சொல்லாமல்
சில மட்டும் கூறி முடிக்கப்பட்ட
எதார்த்தம் .இப்படம்.
கதையோட்டம்
சிரத்தையுடன் தொழில் செய்து
சீதனமாய் பொருள் பெற்றூ
சீராய் வாழ்வை நடத்தும்
சிட்டுக்கள்.
நவீன வாழ்விலும்
நளின உடையிலும்
போகங்களில் மோகமாகும் வேளை
தாமும் அப்படி ஆக முயற்சி..
தேடியதில் தேர்ந்தது
எல்.ஐ.சி.
பெயர் பெற்ற காப்பீடு
என்றாலும்,
அதில் இணைந்தவர்கள் எத்தனை!
அதில் இழந்தவர்கள் எத்தனை!
அதில் உயர்ந்தவர்கள் எத்தனை !
அதில் உதறிவிட்டு விலகியவர் எத்தனை!
ஆம் அப்படியே ஆயிற்று !
பெருத்த ஏமாற்றம்.
நினைத்தது நடக்கவில்லை
தொடர்கிறது நடைமுறை வாழ்வு ,
ஆனால் ...
மனதின் மூலையில் ஊசலாடிய
போக வாழ்வு
முழுவதுமாய் நிரம்புகிறது
அடுத்த முயற்சி ,
மாய உலகம்
மன்னவ உபச்சாரம்
புகழின் பூங்காவனம்
வேறென்ன ,
திரைப்பட முயற்சிதான்
இங்கு ஒரு கணம்
எல்.ஐ.சி உறுப்பினரின்
வாழ்வினை ஒப்பிடுவோம்,
அதில் இணைந்தவர்கள் எத்தனை !
அதில் இழந்தவர்கள் எத்தனை !
அதில் உயர்ந்தவர்கள் எத்தனை !
அதில் உதறிவிட்டு விலகியவர்கள் எத்தனை !
அதிலும் ஏமாற்றம்
தன் வாழ்வே
கேள்விக்குறியாய்?
குடும்பத்தின் நிலை?
ஆம்,
குலத்தின் ஆணி வேர்
குணத்தின் சிகரமான
தாய்க்கு இறுதி மூச்சு
மெல்ல மெல்ல
இறுதியை நோக்கி...
இச்சூழ்நிலையில் அவன்
அழுகையுடன் அவதரிக்கும்
சிசுவைப் போல...
தம்மைத் தவிர
யாருமற்ற தேசத்தில்
தென்படும்
சாத்தான் கூட
சகோதரன் என்பதைப் போல,
ஐக்கியமடைகிறான்
நஞ்சின் கூடாரத்தில்,
நஞ்சுக்கும் நஞ்சான
நல்லவர்கள் துரோகத்தில் [காவல் துறை]
சிறையின் வாசம்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு...
அவமானங்களில் அம்மணமான
நல்ல மனதுடன்
வெளிவருகிறான்.
நஞ்சின் உதவிக்கு
நன்றி நவிழி
‘ நல்லன வல்ல செய்யேன் ’ என்கிறான்.
அது விலகுகிறது .
வெளி உலகம் வெகுளியல்ல
சூட்சுமங்கள் சூழ்ந்து நிற்கும்.
பூமியைத் துளைத்து
கிளைத்த தரு
ஒருநாள் பூமிக்குள்ளே
நிறைவதைப் போல...
தன் நேசமான தொழிலை
தன்னம்பிக்கையுடன்
தொடர்கிறான்
மாயக்கண்ணாடி
நிஜ பிம்பங்களை
வெளிக்கொணர்வதில்லை
என்றும்
மாயங்கள் அதனுள்ளே.
- கோட்டை பிரபு