
நீ தந்த முத்தங்களோடு
முடிவுக்கு வருகிறது இன்றைய வாழ்வு
மோகிதத்தின் வெம்மைப் போர்த்தி
தனியே உளைகிறேன்
அந்தரத்தில் விரிக்கப்பட்டிருக்கும் என் மஞ்சத்தில்
காதலின் பேரொளி பிரகாசிக்கும் நீயற்றதான வெறுமையில்
தேங்கி வீழ்கிறது மனஅருவி
நீர்த்துப்போனதொரு கவிதையைப்போல
உடனுறையா ஏக்கத்தில்
ஒரு கிழங்கைப்போல் வெந்து பிளந்திருக்கும்
என்தசையைத் தின்று பசியாறுகின்றன
அதிகாலையின் காக்கைகள்
ஆர்ட்டீசியன் ஊற்றைப்போல் பீறி நீ திரும்பும்காலை
என்னவாய் நான் மீந்திருப்பேன்?
- ஆதவன் தீட்சண்யா (