அசந்து கொண்டிருந்தேன்!
எழுந்து நடந்து கொண்டிருக்கும்
தத்துவங்களும் விசாரணைகளும்
விளக்க முடியாத தூரத்தில்!
அம்மாவின் கறுத்த கைகள் படுகிறது!
அப்பாவின் தடிப்பான கைகளும் விழுகிறது!
இருந்தபோதும் இந்தப் படுக்கையில்
இப்படி அசந்து கொண்டிருப்பதில்தான்
எத்தனை சுகம்?
படுத்துக் கொள்வதை விரும்புகிறேன்!
படுத்த மாத்திரத்தில் தொலைந்து
போகிறேன்!
மீண்டும் மீண்டும்
கைகள் சுரண்டுகின்றன!
“எங்கையாவது போய் தொலையேண்டா”
“ஒரு வேலைக்கும் புண்ணியம்
இல்லனா வாழ்ந்தும் அர்த்தமில்ல”
எழுந்து போய் குவளையில்
நீர் நிரப்பும் போது
வீட்டின் சூன்யத்தைக் கேட்க முடிகிறது!
பிறகு. . .
மீண்டும் மதிய நேரம்!
மீண்டும் படுக்கையில்!
- கே.பாலமுருகன் (மலேசியா) (bala_