பட்டாம்பூச்சயின் சிறகசைப்பாய்
உன் நினைவுகளில்
என் இதயம்
இமைமூடி
உறங்கமறுக்கும் இருவிழிகளுக்கு
இடையில்
திறந்தே கிடக்கிறது
உன் முகப்படம்
கரையைக் கடக்காத அலைகள்
மீண்டும் மீண்டும்
அதன் முயற்சிபோல
நானும் காதலில்
உனக்கு ஒரு புதுப்பெயர்
ஒப்பிடுகிறேன் திருடி
மலர்மோதி மலர் சிதைந்ததில்லை
உன் பொய்கோபம் போல
நாம்
அடிக்கடி பிரிக்கப்படுகிறோம்
என் தனிமையை கலைக்கும்பொதெல்லாம்
நம்
யுத்தங்கள் நீண்ட மௌனத்தில்
இதயங்கள் சரணடைந்தன.
- அறிவுநிதி