தீர்ந்து போகும் பேனாவின்
மையைப் போலவே
அதிவிரைவில் முடிந்து போகிறது
என் காதலின் கனவுகளும்...
பென்சிலின் கறுமையான
எழுத்துகளில் வெளிப்படுகிறது
என் தனிமையின் புலம்பல்
என்றபோதிலும்
அவ்வளவு சீக்கிரம்
தீர்ந்து போவதில்லை
பென்சிலின் கறுப்பு மையும்
என் தனிமை குரலும்....
- மழைக் காதலன்