
எல்லா திருத்தலங்களுக்கும்
நீ செல்கிறாய்
அண்மையில்
நீ சென்றது
'வாடிகன்' நகரம்
இறைவனுக்கு நெருக்கமானவர்களுக்கும்
நெருக்கமானவன் நீ
என்பது தெரிகிறது
உனக்கு மட்டுமே
மதவெறியோ
மதவெறுப்போ இல்லை
மக்களை
வித்தியாசமில்லாமல்
நேசிக்கும் உன்னை
ஒருவரும் நேசிப்பதில்லை
யாரும் நேசிக்காதபோது
யாரையும் நேசிப்பது
நியாயமில்லை
'மதியாதார் வாசல்
மிதியாதே' என்பது
உனக்கும்தான்
ஓர் ஐயம்!
எல்லார்க்குமானவன்
நீயா?
இறைவனா?
- பிச்சினிக்காடு இளங்கோ (