
நடுநாசி முற்றமேறி
கனவுக் கனல்வீசித்
தீய்ந்த என் விழிகளுக்குள்
தமிழமுதாய்ச் சிதறி
நாவடித் தேனூற்றுகளை
அதிரடியாய் உடைத்து
பட்டமரத் தேகமெங்கும்
பனிப்புல்லாய்ச் சிலிர்த்து
துயர் மேயும் இதயத்தின்
திறவாக் குகைக்குள்ளும்
தித்திப்புக் கனிரசமாய்
இறங்கி
வளர்முத்த வெறிகொட்டும்
உயிர் வெள்ள நயாகரா
- புகாரி (