
தாராளமாகவே
கமிஷன் கொடுத்தான்.
ஒட்டி உரசி
கிளர்ச்சி கண்டு
பயணம் செய்த ஆட்டோவுக்கு
மீட்டருக்கு மேலேயே
போட்டுக் கொடுத்தான்.
உணவு பரிமறிய
ஓட்டல் சர்வருக்கு
சாப்பாடு விலையே
டிப்ஸ் ஆக விழுந்தது.
விழுந்து புரண்டு
வியர்த்துக் கிடந்த
விடுதியறைக்கு
மூன்று மணி நேரத்துக்கு
முழுநாள் வாடகை.
பிரிவதற்கு முன்பாக
அவளுக்கும் ஒரு தொகை
தரகன் சொன்னதை
தாண்டியே கைமாறியது.
இப்படியாக
அவளின் பொருட்டு
அள்ளி அள்ளிக் கொடுத்த
அவனுக்கு
அவள் கொடுத்துவிட்டதாக
பேசிக் கொள்கிறார்கள்
அதையும் அவன்தான்
கொடுத்துவிட்டு வந்திருக்கிறான்
என்பதை அறியாமல்
- ஜெயபாஸ்கரன் (jayabaskaran_