
விழி பிதுங்க வைத்தது
ஆம் இந்த உலகத்தில்
அனைத்தும் கிடைக்கவில்லை
என்றாலும் எனக்காக
என் குடும்பத்திற்கு மட்டும்
கிடைப்பதற்காக என் வழி
கடவுளை நாடினேன்
சிறு வயதில் வறுமை
சில நேரம் பட்டினி
வாடினேன்
என்னை
வழி காட்ட வந்தார்கள்
உன் கடவுளை அடைய
உன் குடும்பத்திற்காக
நீ மாறவேண்டும் என்றார்கள்
நீ உன் மனதை மாற்றி
எங்களுடன் செயல்படு
போதனை செய்தார்கள்
மனித வெடி குண்டாக
தயார் செய்தார்கள்
தைரியமாக சென்றேன்.....
என் குடும்பத்திற்கு பணம்
நான் ஆனேன் பிணம்...
- ராகவன்